பிரதமரின் பால புரஸ்கர் விருதுகள் - 2022
25 ஜன., 2022
ஒவ்வொரு வருடமும் மாற்றத்தை ஏற்படுத்தும் சாதனைகளை புரிந்த குழந்தைகளுக்கு ஒன்றிய அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சகம் பிரதமரின் பால புரஸ்கர் (PRADHAN MANTRI RASHTRIYA BAL PURASKAR) விருதுகளை அறிவித்து வருகிறது. அவ்வகையில், இந்த வருடம் 29 குழந்தைகளுக்கு அவ்விருது கொடுக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டுள்ளது. விருதை பெரும் ஒவ்வொரு குழந்தைக்கும் ரூ.1,00,000 பரிசாக பெறுவர்.
பிளாக் செயின் தொழில்நுட்பம் :
இவ்வருடம் விருதுகள் மெய்நிகர் (Virtual) வழியில் வழங்கப்பட்டுள்ளது. ஐஐடி கான்பூர் பிளாக் செயின் தொழில்நுட்பத்தின் துணைக்கொண்டு இவ்விருதுகளை மெய்நிகர் வழியில் வழங்க வழிவகை செய்துள்ளது. இவ்விருதினை பெரும் ஒவ்வொருவரும் தமது கைபேசியில் செயலி ஒன்றை நிறுவதன் மூலம் தாங்கள் வென்ற சான்றிதழை மெய்நிகர் வழியில் பெற்றுக்கொள்ள முடியும். இந்த சான்றிதழ்கள் பிளாக் செயின் தொழில்நுட்பத்தில் சேமிக்கப்படுவதால், இவற்றை எவராலும் போலியாக உருவாக்கவோ, அழிக்கவோ முடியாது. மேலும் உலகின் எந்த மூலையிலும் இதன் நம்பகத்தன்மையை சரிபார்த்துக்கொள்ள முடியும்.