ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி | Asian Infrastructure development bank

 ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி என்பது ஆசியாவின் சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் பொருட்டு உருவாக்கப்பட்ட ஒரு பன்முக வளர்ச்சி வங்கி ஆகும். இது சீனாவின் பெய்ஜிங்கில் சனவரி 2016 முதல் செயல்பட்டு வருகிறது. ஆசிய நாடுகளுக்கு இடையே உள்கட்டமைப்பை வளர்க்கும் பொருட்டு செயல்படும் இந்த பன்னாட்டு நிதி நிறுவனத்தில் சீனா, இந்தியா, இலங்கை என மொத்தம் 21 உறுப்பினர்களைக் கொண்டுள்ளது.

ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி, பெய்ஜிங்  

கொஞ்சம் வரலாறு     

    இரண்டாம் உலக போரின் பின்னர் உருவாக்கப்பட்ட உலக வங்கி (World Bank) , பன்னாட்டு நாணய நிதியம் (International Monetary Fund), ஆசிய வளர்ச்சி வங்கி (Asian Development Bank) போன்ற மிக சக்தி வாய்ந்த உலக நிறுவனங்களின் பின் அமெரிக்கா இருந்ததன் பொருட்டு, ஒரு மாற்று சக்தியை சீனா உருவாக்க முடிவு செய்தது. இதை செயலில் கொண்டு வரும் பொருட்டு 2014-ம் ஆண்டு இந்தோனேசியாவின் பாலியில் நடந்த ஆசிய பசிபிக் நாடுகளின் பொருளாதார சந்திப்பில் சீன அதிபர்  ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கியைப் பற்றி அறிவித்தார். இந்த வங்கியின் மூலதனமாக சுமார் 100 பில்லியன் டாலர்கள் அறிவிக்கப்பட்டது. 

உறுப்புக்கள் :  

   ஒரு வங்கி செயல்பட பலமட்ட அளவில் குழுக்களையும் அதிகார மையங்களையும் கொண்டிருக்கும். அதேபோல் இந்த முதலீட்டு வங்கியும் ஆளுநர் குழு (Board of governors), இயக்குனர் குழு (Board of Directors), மூத்த மேலாண்மை குழு (Senior Management), உலகளாவிய ஆலோசனை குழு (International Advisory Panel) ஆகியவற்றை கொண்டுள்ளது.  

ஆளுநர் குழு :

   ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கியில் உறுப்பினராக இருக்கும் அனைத்து நாடுகளும் ஒரு ஆளுநரையும், ஒரு மாற்று ஆளுநரையும் (Alternate governor) நியமித்துக்கொள்ளலாம். இவர்களின் பதவி காலம் நியமிக்கும் நாட்டின் விருப்பத்தை பொறுத்தது.

முக்கிய சாதனைகள்:     

  • ஐக்கிய நாடுகள் சபையின் பொதுக்குழுவில் நிரந்தர கண்காணிப்பாளராக (Permanent Oberver status) பொறுப்பேற்க 2018-ம் ஆண்டு ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி தகுதி பெற்றது. 
  • 2016-ம் ஆண்டு 57 நபர்களுடன் துவங்கிய இவ்வங்கி 2020-ம் ஆண்டின் இறுதியின்படி 103 நாடுகளை உறுப்பினர்களாக கொண்டுள்ளது. இந்த உறுப்பினர் நாடுகள் உலகின் 79% மக்கள் தொகையையும், 65% உலகின் மொத்த உள்நாட்டு உற்பத்தியையும்(GDP)  கொண்டது.