பொருளாதார ஆய்வறிக்கை 2021-22-ன் முக்கிய அம்சங்கள்
20 மார்., 2022
2021-22-ம் ஆண்டிற்கான பொருளாதார ஆய்வறிக்கையை பாராளுமன்றத்தில் குடியரசு தலைவரின் உரைக்குப்பின்னர் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் சமர்ப்பித்தார். இவ்வருட ஆய்வறிக்கையின் மைய கருப்பொருளாக "விரைவான அணுகுமுறை" (Agile Approach) எடுத்துக்கொள்ளப்பட்டது.
பொருளாதார ஆய்வறிக்கை என்றால் என்ன ?
இந்திய பொருளாதார ஆய்வறிக்கை என்பது ஆண்டிற்கொருமுறை நிதி அமைச்சகம் வெளியிடும் கோப்பாகும்.
இந்தியாவின் முதல் பொருளாதார ஆய்வறிக்கை 1950-51-ம் ஆண்டில் பாராளுமன்றத்தின் முன் சமர்ப்பிக்கப்பட்டது.
முக்கிய அம்சங்கள் :
வளர்ச்சி:
- 2021-22-ல் உறுதியான நிலையில் 9.2 சதவீத வளர்ச்சி எதிர்பார்க்கப்படுகிறது (2020-21 ஆண்டு இதே கட்டத்தில் பொருளாதாரம் 7.3% சுருக்கத்தை (Contraction) எதிர்கொண்டது).
- 2022-23-ல் 8.0 - 8.5 சதவீத ஜிடிபி வளர்ச்சி மதிப்பிடப்பட்டுள்ளது. உலக வங்கி மற்றும் ஆசிய வளர்ச்சி வங்கி இந்தியாவின் வளர்ச்சி பற்றி வெளியிட்ட கணிப்புகளுடன் இது ஒத்துப்போகிறது.
அந்நிய செலாவணி :
- 2021 டிசம்பர் 31 அன்று அந்நியச் செலாவணி கையிருப்பு 633.6 பில்லியன் அமெரிக்க டாலரைத் தொட்டுள்ளது.
- இது 2022-23-ம் ஆண்டில் உலக அளவில் நிகழவிருக்கும் பல்வேறு பொருளாதார சிக்கல்களை எதிர்கொள்ள உதவும்.
வேளாண்மை:
- 2021 – 22-ல் ஒட்டுமொத்த மதிப்புக் கூடுதல் 3.9 சதவீத வளர்ச்சி அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது.
- அடிப்படை ஆதாய விலை கொள்கை (Minimum Support Price Policy) பல்வேறு பயிர்களை விளைவிக்க ஊக்குவிக்கும் வகையில் அமையும். இது பாரம்பரியமான நெல், கோதுமை, கரும்பு போன்ற பயிர்களில் இருந்து பல்வகைபடுத்துதலை ஊக்குவிக்கும் (Crop Diversification).
- கால்நடை மற்றும் அதையொட்டிய துறை 2019-20 வரையான ஐந்தாடுகளில் 8.15% வளர்ச்சியை கண்டுள்ளது.
- உணவு பாதுகாப்பு வலையமைப்பை பிரதம மந்திரி கரீப் கல்யாண் திட்டத்தின் (PMGKY) மூலம் இன்னும் பலருக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.