ரம்பா கிளர்ச்சி
ராம்பா கிளர்ச்சி (மான்யம் கிளர்ச்சி ) என்பது ஒரு பழங்குடியினர் எழுச்சி. இது மெட்ராஸ் ப்ரெசிடெண்சியின் கோதாவரி நிறுவனத்தில் அல்லூரி சீதாராம ராஜு தலைமையில் நடைபெற்றது. ரம்பா (Rampa)ஆந்திராவின் கடலோரப் பகுதியில் உள்ளது.
அல்லூரி சீதாராம ராஜு:
கடலோர நகரமான விஷாக்கப்பட்டினத்திற்கு அருகில் உள்ள ஒரு சிறிய கிராமத்தில் ஜூலை 4, 1897ல் பிறந்தார். இவர் ஆரம்பத்தில் காந்தியின் ஒத்துழையாமை இயக்கத்தின் கீழ் இருந்தார் ஆனால் அதனால் ஒரு வெற்றியும் இல்லை.
இவர் ஆதிவாசிகளிடம் இருந்து கால சோதனையான போர் முறைகள்(Time-Tested methods of war) மற்றும் அவரின் தந்திரங்களை ஆங்கிலேயர்க்கு எதிராக போர் வைக்க சேர்த்தார். மே 7, 1924ல் அவர் மரத்தில் கட்டப்பட்டு ஆங்கிலேயரால் சுட்டுக் கொல்லப்பட்டார். அவர் மான்யம் வீருடு (காட்டின் நாயகன்) என்ற பட்டத்துடன் கௌரவிக்கப்பட்டார். ஆந்திர பிரதேச அரசு ஒவ்வொரு ஆண்டும் அவரது பிறந்தநாளான ஜூலை 4ஆம் தேதியை அரசு விழாவாகக் கொண்டாடுகிறது.