இந்தியாவிலுள்ள தேசிய பூங்காக்கள் 

        தேசிய பூங்கா (national park) என்பது அரசால் அறிவிக்கப்பட்ட அல்லது அதற்கு உரிமையான இயற்கை நிலங்களை கொண்ட ஒரு ஒதுக்ககம் ஆகும். இது மனிதருடைய பொழுதுபோக்கு, விலங்குகள் அல்லது சூழல் பாதுகாப்பு நோக்கங்களுடன் ஒதுக்கப்படுகின்றன. இந்தியாவின் முதல் தேசிய பூங்கா 1936ல் ஹெய்லி என்ற பெயரில் நிறுவப்பட்டது, தற்பொழுது ஜிம் கார்பெட் தேசிய பூங்கா என்று அறியப்படுகிறது. தற்பொழுது இந்தியாவில் 106 தேசிய பூங்காக்கள் இருப்பதாக அறியப்படுகிறது (2022ல்).

 1. ஹெமிஸ் தேசிய பூங்கா :

        இது லடாக் இல் உள்ளது. பனிச்சிறுத்தையைக் காண சிறந்த இடமாக கருதப்படுகிறது. நந்தா தேவி உயிர்கோளத்திற்குப் பிறகு இரண்டாவது பெரிய தொடர்ச்சியான பாதுகாக்கப்பட்ட பகுதியாகும். பாலிஆர்க்டிக் சுற்றுச்சூழல் மண்டலத்திற்குள் (Palearctic ecozone) இந்தியாவின் ஒரே பாகுகாக்கப்பட்ட பகுதி. இது ஜம்மு காஷ்மீரின் கிழக்கு லடாக் பகுதியில் உள்ள உயரமான தேசிய பூங்கா ஆகும்.

2. காசிரங்கா தேசிய பூங்கா:

        இத்தேசிய பூங்கா அஸ்ஸாமில் அமைந்துள்ளது. மேலும் இது புலிகள் காப்பகமாக அறிவிக்கப்பட்டது. முக்கியமான பறவை பகுதியாக (Bird Life International ஆல்) அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இது ஒரு  யுனெஸ்கோ (UNESCO) உலக மரபுடைமைத்தலம். ஒரு கொம்பு காண்டாமிருகத்திற்கு பிரபலமான தளம் இது கருதப்படுகிறது.
        இத்தலத்தை இரண்டு பிரிவுகளாக பிரிக்க அறிவிப்பு வெளியிடப்பட்டது கிழக்கு அசாம் வனவிலங்குகள் (தெற்கு பிரிவு)
பிஸ்வநாத் வனவிலங்கு பிரிவு (வடக்கு பிரிவு) இவ்விரண்டு பிரிவுகளை பிரம்மபுத்திரா நதி பிரிக்கிறது.

3. ஜிம் கார்பெட் தேசிய பூங்கா:

        இத்தேசிய பூங்கா உத்தரகாண்ட மாநிலத்தின் நைனிடால் மாவட்டத்தில் அமைந்துள்ளது. 1936 ஆம் ஆண்டு அழிந்து வரும் வங்காளப்ப புளியைப் பாதுகாக்க ஹெய்லி தேசிய பூங்காவாக நிறுவப்பட்டது.  
        "The Project Tiger" 1973ல்  கார்பெட் புலிகள் காப்பகத்தின் ஒரு பகுதியாக உள்ள கார்பெட் தேசிய பூங்காவில் தொடங்கப்பட்டது.

4. ஆனைமுடி சோலா தேசிய பூங்கா:    

      கேரளா மாநிலம், இருக்க மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி அமைந்துள்ளது. தென்னிந்தியாவின் மிக உயரமான சிகரம், ஆனைமுடி.
    இது மன்னவன் சோலா, இடிவார சோலா மற்றும் புல்லர்டி சோலா ஆகியவற்றால் ஆனது, மொத்த பரப்பளவு 7.5 கி.மீ சதுரம்.