திருப்பூர் ஏற்றுமதியாளர்களுக்கான முத்ரா கடன்: முழுமையான வழிகாட்டி
உங்கள் பின்னலாடை யூனிட்டிற்கு புதிய மெஷின்கள் வாங்க வேண்டுமா ? ஒரு சிறிய ஏற்றுமதி ஆர்டரை முடிக்க உடனடிப் பணம் தேவையா? பணப் பற்றாக்குறையால் உங்கள் வளர்ச்சி தடைப்பட வேண்டாம். இதற்காகவே அரசின் முத்ரா கடன் செயலில் உள்ளது.
முத்ரா கடன் என்றால் என்ன?
ஒன்றிய அரசின் முத்ரா திட்டம் விவசாயம் சாராத சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான (MSME) கடன் திட்டத்தை செயல்படுத்துகிறது.
முத்ரா திட்டம் மூன்று வகை கடன் திட்டத்தை கொண்டுள்ளது
- சிஷு: ரூ. 50,000 வரையிலான கடன்
- கிஷோர்: ரூ. 50,000 முதல் ரூ. 5 லட்சம் வரையிலான கடன்
- தருண்: ரூ. 5 லட்சம் முதல் ரூ. 10 லட்சம் வரையிலான கடன்.
- தருண்+: ரூ. 10 லட்சம் முதல் ரூ. 20 லட்சம் வரையிலான கடன்.
திருப்பூர் ஜவுளித் துறைக்கு இது எப்படி பொருந்தும்?
எ. கா 1: 2-3 Juki தையல் மெஷின் வாங்க சிஷு கடன் திட்டத்தை பயன்படுத்தலாம்.
எ. கா 2: சாயம், நூல் போன்ற மூலப் பொருட்கள் கொள்முதல் செய்ய கிஷோர் கடன் திட்டத்தை பயன்படுத்தலாம்.