உதவித்தொகை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஆதித்யா பிர்லா கேப்பிட்டல் நிறுவனத்தின் கோவிட் உதவித்தொகைகள்

 இந்த கோவிட் பெருந்தொற்று துவங்கியதில் இருந்து பல மக்களின் வாழ்வாதாரங்கள் இக்கட்டான சூழ்நிலைகளுக்கு தள்ளப்பட்டுள்ளன. அது போன்ற சூழ்நிலைகளில் உள்ள மாணவர்களுக்கு உதவும் விதமாக ஆதித்யா பிர்லா கேப்பிட்டல்  நிறுவனம் (Aditya Birla Capital Foundation)  உதவித்தொகை ஒன்றை அறிவித்துள்ளது.

யார் விண்ணப்பிக்கலாம் :

கோவிட் பெருந்தொற்றால் உயிரிழந்தவர்களின் குழந்தைகள்.

தகுதிகள் : மேற்கூறிய மாணவர்கள் ஒன்றாம் வகுப்பிலிருந்து இளங்கலை கல்விக்கு இடையில் பயில்பவராக இருக்க வேண்டும்.

உதவித்தொகை : மேற்சொன்ன மாணவர் ஒன்றாம் வகுப்பிலிருந்து எட்டாம் வகுப்பிற்குள் பயில்பவராக இருந்தால் அத்தகைய மாணவர்களுக்கு ரூ.24000, ஒன்பதில் இருந்து பனிரெண்டாம் வகுப்பிற்குள் இருப்பவர்களுக்கு ரூ.3000, பொது இளங்கலை கல்வி பயில்பவர்களுக்கு ரூ.36000, தொழில் சார்ந்த இளங்கலை கல்வி பயில்பவர்களுக்கு ரூ.60000 உதவித்தொகையாக வழங்கப்படும் . 

விண்ணப்பிக்க இறுதி நாள் : சனவரி 31, 2022

விண்ணப்பிப்பதற்கான வலைத்தளம் : www.b4s.in/a/ABCC1

உதவிக்கு : adityabirlacapital@buddy4study.com 

தொலைபேசி : 011-430-92248 (Ext-268)

 

மத்திய அரசின் கல்லூரி மற்றும் பல்கலைக்கழக மாணவர்களுக்கான உதவித்தொகை

 மத்திய அரசின் கீழ் இயங்கும் உயர்கல்வி துறை அமைச்சகத்தால் வழங்கப்படும் இந்த உதவித்தொகை படிக்கும் மாணவர்களை ஊக்குவிக்கும் பொருட்டு அவர்களின் கல்விச்செலவுளுக்கு உதவும் வகையில் உள்ளது.

யார் விண்ணப்பிக்கலாம் :

1. 12ம் வகுப்பு முடித்த 80 சதவீதத்திற்கு அதிகம் மதிப்பெண் பெற்றோர்.

2. குடும்ப வருமானம் 8 லட்சத்திற்கு கீழ் உள்ளோர் 

3. தொலைத்தொடர்பு கல்வி பயிலாமல் நேரிடையாக கல்லூரியிலோ அல்லது பல்கலைக்கழகத்திலோ பயில்வோர் 


உதவித்தொகை விவரம் :

இளங்கலை கல்வி பயிலும் நேரத்தில் வருடம் ரூபாய் 10000 மாணக்கரின் கணக்கில் வரவு வைக்கப்படும். முதுகலை பயிலும் பொழுது அந்த தொகை ரூபாய் 20000 ஆக கணக்கில் வரவு வைக்கப்படும்.

உதவித்தொகை பற்றிய அரசு வெளியிட்ட கோப்பு :  https://www.mediafire.com/file/l9dwkexojnc16ks/FAQ_DOHE_CSSS.pdf/file