யுபிஎஸ்சி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

Padmasani Ammal - TNPSC

Padmasani Ammal

 Born : Madurai, 1897

  • Padmasani Ammal was married at the age of 10 and was sent with her husband Srinivasa Varadan when she was 15. Her Husband was a Tamil pandit in manamadurai. He took part in the freedom movement and later left his job to become a reporter and manager of "Desabaktan" and "Navasakthi" magazines in Madurai.
  • The couples jointly sang the songs of Subramaniya Bharathi to propagate the freedom movement. They actively participated in the Khadi movement and started producing spinning wheels at Madurai. They joined the Sri Bharatha Ashram founded by Subramaniyam Siva and even maintained it in the absence of Siva, whenever he was imprisoned. She headed the Neill Satyagraha in Madurai.

தமிழின் பிரதான பெண் எழுத்தாளர்கள்

அம்பை :

Ambai
அம்பை

 அம்பை எனப்படும் சி.எஸ்.லக்சுமி தமிழின் மிகமுக்கிய படைப்பாளிகளில் ஒருவர். பெண்ணிலை நோக்கினை வெளிப்படுத்தும் வகைமையிலான தமிழ்ச் சிறுகதைகளின் முன்னோடி. புனைவு எழுதுவது மட்டும் நில்லாது தி இந்து, தி எக்னாமிக்ஸ் அண்ட் பொலிடிக்கல் வீக்லி போன்ற பல முன்னணி செய்தித்தாள்களில் கட்டுரைகளையும் எண்ணங்களையும் எழுதி வருகிறார்.  

சாகித்ய அகாதெமி பரிசு பெற்ற நூல்கள் :

  • சிவப்பு கழுத்துடன் ஒரு பச்சை பறவை (2021)

மற்ற முக்கிய நூல்கள் :

  • ஒரு கறுப்புச் சிலந்தியுடன்
  • வற்றும் ஏரியின் மீன்கள்
  • சொல்லாத கதைகள்
  • காட்டில் ஒரு மான்
  • வீட்டின் மூலையில் ஓர் சமையல் அறை
  • அந்தேரி மேம்பாலத்தில் ஒரு சந்திப்பு
  • அந்தி மாலை 

பொருளாதார ஆய்வறிக்கை 2021-22-ன் முக்கிய அம்சங்கள்

  

2021-22-ம் ஆண்டிற்கான பொருளாதார ஆய்வறிக்கையை பாராளுமன்றத்தில் குடியரசு தலைவரின் உரைக்குப்பின்னர் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் சமர்ப்பித்தார். இவ்வருட ஆய்வறிக்கையின் மைய கருப்பொருளாக "விரைவான அணுகுமுறை" (Agile Approach) எடுத்துக்கொள்ளப்பட்டது.

பொருளாதார ஆய்வறிக்கை


பொருளாதார ஆய்வறிக்கை என்றால் என்ன ?

இந்திய பொருளாதார ஆய்வறிக்கை என்பது ஆண்டிற்கொருமுறை நிதி அமைச்சகம் வெளியிடும் கோப்பாகும்.

    இக்கோப்பு இந்தியாவின் பொருளாதாரத்தை பற்றியும் வளர்ச்சியை பற்றிய அதிகாரபூர்வ எண்களை கொண்டது மட்டுமில்லாமல் இந்திய பொருளாதாரத்தின் மீதான மூல தரவாக (Source data) பார்க்கப்படுகிறது.
      இது பொருளாதார விவகாரங்கள் (Department of Economic affairs) துறையின் கீழ் செயல்படும் பொருளாதார பிரிவால் தலைமை பொருளாதார ஆலோசகரின் ஆலோசனையின் அடிப்படையில் தயாரிக்க படுகிறது.

      இந்தியாவின் முதல் பொருளாதார ஆய்வறிக்கை 1950-51-ம் ஆண்டில் பாராளுமன்றத்தின் முன் சமர்ப்பிக்கப்பட்டது.

      முக்கிய அம்சங்கள் : 

      வளர்ச்சி:

      • 2021-22-ல் உறுதியான நிலையில் 9.2 சதவீத வளர்ச்சி எதிர்பார்க்கப்படுகிறது (2020-21 ஆண்டு இதே கட்டத்தில் பொருளாதாரம் 7.3% சுருக்கத்தை (Contraction)  எதிர்கொண்டது).
      • 2022-23-ல் 8.0 - 8.5 சதவீத ஜிடிபி வளர்ச்சி மதிப்பிடப்பட்டுள்ளது. உலக வங்கி மற்றும் ஆசிய வளர்ச்சி வங்கி இந்தியாவின் வளர்ச்சி பற்றி வெளியிட்ட கணிப்புகளுடன் இது ஒத்துப்போகிறது.

      அந்நிய செலாவணி :

      • 2021 டிசம்பர் 31 அன்று அந்நியச் செலாவணி கையிருப்பு 633.6 பில்லியன் அமெரிக்க டாலரைத் தொட்டுள்ளது.
      • இது 2022-23-ம் ஆண்டில் உலக அளவில் நிகழவிருக்கும் பல்வேறு பொருளாதார சிக்கல்களை எதிர்கொள்ள உதவும். 

      வேளாண்மை:

      • 2021 – 22-ல் ஒட்டுமொத்த மதிப்புக் கூடுதல் 3.9 சதவீத வளர்ச்சி அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது.
      • அடிப்படை ஆதாய விலை கொள்கை (Minimum Support Price Policy) பல்வேறு பயிர்களை விளைவிக்க ஊக்குவிக்கும் வகையில் அமையும். இது பாரம்பரியமான நெல், கோதுமை, கரும்பு போன்ற பயிர்களில் இருந்து பல்வகைபடுத்துதலை ஊக்குவிக்கும் (Crop Diversification).
      • கால்நடை மற்றும் அதையொட்டிய துறை 2019-20 வரையான ஐந்தாடுகளில் 8.15% வளர்ச்சியை கண்டுள்ளது.  
      • உணவு பாதுகாப்பு வலையமைப்பை பிரதம மந்திரி கரீப் கல்யாண் திட்டத்தின் (PMGKY) மூலம் இன்னும் பலருக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. 


      பிரதமரின் பால புரஸ்கர் விருதுகள் - 2022

       


      ஒவ்வொரு வருடமும் மாற்றத்தை ஏற்படுத்தும் சாதனைகளை புரிந்த குழந்தைகளுக்கு ஒன்றிய அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சகம் பிரதமரின் பால புரஸ்கர் (PRADHAN MANTRI RASHTRIYA BAL PURASKAR) விருதுகளை அறிவித்து வருகிறது. அவ்வகையில், இந்த வருடம் 29 குழந்தைகளுக்கு அவ்விருது கொடுக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டுள்ளது. விருதை பெரும் ஒவ்வொரு குழந்தைக்கும் ரூ.1,00,000 பரிசாக பெறுவர்.

      பிளாக் செயின் தொழில்நுட்பம் :

      இவ்வருடம் விருதுகள் மெய்நிகர் (Virtual) வழியில் வழங்கப்பட்டுள்ளது. ஐஐடி கான்பூர் பிளாக் செயின் தொழில்நுட்பத்தின் துணைக்கொண்டு இவ்விருதுகளை மெய்நிகர் வழியில் வழங்க வழிவகை செய்துள்ளது. இவ்விருதினை பெரும் ஒவ்வொருவரும் தமது கைபேசியில் செயலி ஒன்றை நிறுவதன் மூலம் தாங்கள் வென்ற சான்றிதழை மெய்நிகர் வழியில் பெற்றுக்கொள்ள முடியும். இந்த சான்றிதழ்கள் பிளாக் செயின் தொழில்நுட்பத்தில் சேமிக்கப்படுவதால், இவற்றை எவராலும் போலியாக உருவாக்கவோ, அழிக்கவோ முடியாது. மேலும் உலகின் எந்த மூலையிலும் இதன் நம்பகத்தன்மையை சரிபார்த்துக்கொள்ள முடியும்.   

      ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி | Asian Infrastructure development bank

       ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி என்பது ஆசியாவின் சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் பொருட்டு உருவாக்கப்பட்ட ஒரு பன்முக வளர்ச்சி வங்கி ஆகும். இது சீனாவின் பெய்ஜிங்கில் சனவரி 2016 முதல் செயல்பட்டு வருகிறது. ஆசிய நாடுகளுக்கு இடையே உள்கட்டமைப்பை வளர்க்கும் பொருட்டு செயல்படும் இந்த பன்னாட்டு நிதி நிறுவனத்தில் சீனா, இந்தியா, இலங்கை என மொத்தம் 21 உறுப்பினர்களைக் கொண்டுள்ளது.

      ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி, பெய்ஜிங்  

      கொஞ்சம் வரலாறு     

          இரண்டாம் உலக போரின் பின்னர் உருவாக்கப்பட்ட உலக வங்கி (World Bank) , பன்னாட்டு நாணய நிதியம் (International Monetary Fund), ஆசிய வளர்ச்சி வங்கி (Asian Development Bank) போன்ற மிக சக்தி வாய்ந்த உலக நிறுவனங்களின் பின் அமெரிக்கா இருந்ததன் பொருட்டு, ஒரு மாற்று சக்தியை சீனா உருவாக்க முடிவு செய்தது. இதை செயலில் கொண்டு வரும் பொருட்டு 2014-ம் ஆண்டு இந்தோனேசியாவின் பாலியில் நடந்த ஆசிய பசிபிக் நாடுகளின் பொருளாதார சந்திப்பில் சீன அதிபர்  ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கியைப் பற்றி அறிவித்தார். இந்த வங்கியின் மூலதனமாக சுமார் 100 பில்லியன் டாலர்கள் அறிவிக்கப்பட்டது. 

      உறுப்புக்கள் :  

         ஒரு வங்கி செயல்பட பலமட்ட அளவில் குழுக்களையும் அதிகார மையங்களையும் கொண்டிருக்கும். அதேபோல் இந்த முதலீட்டு வங்கியும் ஆளுநர் குழு (Board of governors), இயக்குனர் குழு (Board of Directors), மூத்த மேலாண்மை குழு (Senior Management), உலகளாவிய ஆலோசனை குழு (International Advisory Panel) ஆகியவற்றை கொண்டுள்ளது.  

      ஆளுநர் குழு :

         ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கியில் உறுப்பினராக இருக்கும் அனைத்து நாடுகளும் ஒரு ஆளுநரையும், ஒரு மாற்று ஆளுநரையும் (Alternate governor) நியமித்துக்கொள்ளலாம். இவர்களின் பதவி காலம் நியமிக்கும் நாட்டின் விருப்பத்தை பொறுத்தது.

      முக்கிய சாதனைகள்:     

      • ஐக்கிய நாடுகள் சபையின் பொதுக்குழுவில் நிரந்தர கண்காணிப்பாளராக (Permanent Oberver status) பொறுப்பேற்க 2018-ம் ஆண்டு ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி தகுதி பெற்றது. 
      • 2016-ம் ஆண்டு 57 நபர்களுடன் துவங்கிய இவ்வங்கி 2020-ம் ஆண்டின் இறுதியின்படி 103 நாடுகளை உறுப்பினர்களாக கொண்டுள்ளது. இந்த உறுப்பினர் நாடுகள் உலகின் 79% மக்கள் தொகையையும், 65% உலகின் மொத்த உள்நாட்டு உற்பத்தியையும்(GDP)  கொண்டது.  

      யுபிஎஸ்சி தேர்வுகள் என்றால் என்ன ? அலசுவோம்

       

      யுபிஎஸ்சி தேர்வுகள் என்பது ஒன்றிய அரசுப்பணியாளர் தேர்வாணையம் (Union Public Service Commission) நடத்தும் இந்திய அளவிலான அரசுப்பணிகளுக்கான தேர்வாகும். ஒன்றிய அரசுப்பணியாளர் தேர்வாணையம் இந்திய அளவில் பல துறைகளிடம் விண்ணப்பங்களை பெற்று எழுத்துத் தேர்வு மற்றும் நேரிடை தேர்வின் மூலம் தகுதி வாய்ந்த பணியாளர்களைத் தேர்வு செய்கிறது. மேலும், இந்திய ஆட்சிப் பணி,இந்தியக் காவல் பணி , இந்திய வெளிநாட்டுப் பணி போன்ற பணிச்சேவைகளை ஒழுங்குபடுத்தி அப்பணியாளர்களின் பணிக்கால வாழ்வு, பயிற்சி மற்றும் சேவைவிதிகளை கட்டுப்படுத்தி வருகிறது.

       யுபிஎஸ்சி ஒவ்வொரு வருடமும் இந்தியக் குடிமைப் பணி தேர்வுகளின் மூலம் இந்திய ஆட்சிப் பணி போன்ற மிக முக்கிய அரசுப் பணியாளர்களைத் தேர்வு செய்கிறது. இந்த தேர்வு மூன்று நிலைகளைக் கொண்டது.    

      நிலை 1 : முதல்நிலை அல்லது தகுதி தேர்வுகள் 

         இந்த தகுதி தேர்வு இரண்டு தாள்களை கொண்டது. தாள் ஒன்றில் பொது அறிவு, அரசியல் அறிவியல், வரலாறு, புவியியல், அறிவியல், சுற்றுசூழல், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் என பல்வேறு துறைகளை சார்ந்த அறிவை எழுத்து தேர்வின் மூலம் சோதிப்பர். 

      தாள் இரண்டு - இயல் திறன் தேர்வு

       பத்தியை படித்து விடையளித்தல் மூலம் மொழியாற்றலும், கணிதம் சார்ந்த பல்வேறு கேள்விகள் கேட்கப்படும்.    
         இதில் ஒவ்வொரு தாளும் 200 மதிப்பெண்கள் கொண்டதாகும். தாள் ஒன்றிற்கு தேர்வாணையம் வெளியிடும் கட் ஆப் மதிப்பெண்களை பெற்றிருக்க வேண்டும். தாள் இரண்டில் குறைந்தது 35 மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.