வருமான வரி பிடித்தம் (TDS) என்றால் என்ன? – Porul.in
வருமான வரி பிடித்தம்
வருமான வரி பிடித்தம் (TDS) என்பது, நீங்கள் வருமானம் ஈட்டும்போதே ஒரு குறிப்பிட்ட சதவீதத்தை அரசுக்கு முன்பண வரியாக கழித்து செலுத்தப்படுவதாகும். இந்திய வருமான வரிச் சட்டம், 1961-ல் இந்த விதிகள் விரிவாக கூறப்பட்டுள்ளன.
எடுத்துக்காட்டு:
உங்கள் வங்கி உங்கள் கணக்கின் நிலுவையில் உள்ள பணத்திற்காக ₹10,000 வட்டியை உங்களுக்கு செலுத்துகிறது. இந்த வட்டி உங்கள் வருமானத்தில் ஒரு பகுதி என்பதால் ₹1,000 (10%)-ஐ வங்கியே TDS-ஆக பிடித்தம் செய்து அரசிடம் செலுத்தும்.
உங்கள் சம்பளம் ₹50,000 என்றால், அதிலிருந்து ₹5,000 (10%) TDS-காக கழிக்கப்படலாம்.

ஏன் TDS முன்கூட்டியே கழிக்கப்படுகிறது?
- அரசுக்கு நிலையான வருவாய்: மக்களிடமிருந்து வருட இறுதியில் முழு வரியும் கேட்பதற்கு பதிலாக, ஆண்டு முழுவதும் சிறு தொகைகளாக பெறுபொழுது அரசிற்கு அது நிலையான வருவாயை உறுதி செய்கிறது.
- வரி ஏய்ப்பை தடுத்தல்: அனைவரும் வரி செலுத்துவதை உறுதி செய்கிறது.
- அரசின் செலவினங்களுக்கு உதவுதல்: வருட இறுதிக்காக காத்திராமல் அரசின் தினசரி செலவுகளை மேற்கொள்வதை உறுதி செய்கிறது.
சம்பளம் பெறுவோருக்கான TDS (பிரிவு 192)
- யார் கழிக்கலாம்? – நிறுவனம் அல்லது முதலாளி.
- எப்போது? – ஒவ்வொரு மாத சம்பளத்திலும்.
- எவ்வளவு? – உங்கள் வருமானப் பிரிவின்படி (₹3 லட்சம் வரை வரி இல்லை).
- எப்படி தெரிந்துகொள்வது? – மாதாந்திர சம்பள slip-ல் TDS குறிக்கப்பட்டிருக்கும். வருட இறுதியில் Form 16 வழங்கப்படும்.
TDS-ஐ எப்படி சரிபார்க்கலாம்?
- Form 26AS (Income Tax portal-ல் உங்கள் PAN-ல் அனைத்து TDS-களும் பதிவு செய்யப்பட்டிருக்கும்).
- TDS தவறாக கழிக்கப்பட்டால்? – வருட இறுதியில் Income Tax Return (ITR) தாக்கல் செய்து மீட்கலாம்.
முக்கிய குறிப்புகள்:
✔ TAN எண் – TDS கழிப்பவர்கள் (நிறுவனங்கள், முதலாளிகள்) இதை பெற வேண்டும்.
✔ TDS தவறினால் – அரசு தண்டனை தொகை (Penalty) விதிக்கும்.
✔ PAN இல்லை என்றால் – TDS அதிக சதவீதத்தில் (20%) கழிக்கப்படும்.
TDS என்பது வரி செலுத்தும் பொறுப்பை எளிதாக்கும் ஒரு முறை. உங்கள் வருமானத்தில் இருந்து எவ்வளவு கழிக்கப்படுகிறது என்று கவனித்து, Form 26AS மூலம் சரிபார்க்கவும். வரி ஏய்ப்பு தவிர்க்கப்பட்டு, நாட்டு வளர்ச்சியில் பங்களிக்க இது ஒரு சிறந்த வழி!